Friday, June 14, 2024

வன்னிய குல க்ஷத்ரியா்

வன்னிய குல க்ஷத்ரியா் தினம் இன்று.

 

🛕🌳🔥🔥🔥🔥🔥🌳🛕

 

 ஜீன் 13 − "வன்னிய குல க்ஷத்ரியா் தினம்" .

 G.O.No.271, 13th June 1929 என்கின்ற அரசாணை வழங்கும்போது தமிழ்நாடும், ஆந்திர மாநிலமும் ஒருங்கிணைந்த மெட்ராஸ் அரசாக (Government of Madras) இருந்தது. மேற்படி அரசாணை வருவதற்க்கு முன்பு வரை சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமான தமிழ்நாட்டில் வன்னிய குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

சென்னை மாகானத்தின் ஒரு மாவட்டமாக இருந்த ஆந்திராவில் அக்னி குல க்ஷத்ரியர்கள் பள்ளி மற்றும் வன்னியர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்கள்.

தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் வன்னியர் மட்டுமே "வன்னிய குல க்ஷத்ரியர்" எனவும், ஆந்திராவில் வாழ்ந்துவரும் வன்னியர் "அக்னி குல க்ஷத்ரியர்" எனவும் அரசு ஆணை எண் 271 நாள் 13.6.1929ல் மதராஸ் அரசு வெளியிட்டது.

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் வன்னியரே க்ஷத்ரியர் எனவும், தென்னிந்திய இராஜபுத்திரர்கள் எனவும், தமிழ்நாட்டு க்ஷத்ரியர் எனவும், தமிழ்நாட்டு இராஜபுத்திரா்கள் எனவும் அழைக்கப்படும் வரலாற்று பெருமை உடைய ஒரே இனம் நம் வன்னியகுல க்ஷத்ரிய இனமாகும்.

 

தமிழ்நாட்டில்

"வன்னிய குல க்ஷத்ரியர்"

 ஆந்திராவில்

"அக்னி குல க்ஷத்ரியர்"

கேரளாவில்

சம்பு குல க்ஷத்ரியர்

கர்நாடகாவில்

திகளர் குல க்ஷத்ரியர்

என தென்னிந்தியா முழுவதும், பெருவாரியான மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் ஒரே இனம் அக்னியில் தோன்றிய நம் இனமாகும்.

கி.பி. 08.04.1888ல் இந்தியாவிலேயே முதல் முதலாக "வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கம்" மதராஸ் பிரசிடென்சியில், வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்" மகான் ஸ்ரீ கா.கோபால் நாயக்கர் அவர்களால் துவக்கப்பட்டது.

வன்னியர்கள் (பள்ளி) என்ற பெயரை "வன்னிய குல ஷத்ரியர்" எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து நீதிமன்றம் மூலமாக வழக்கு தொடுத்தனர்.

வன்னியர்கள் "க்ஷத்ரியர் "என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி வெற்றியும் பெற்றார்கள்.

பின்பு நாங்களும் க்ஷத்ரியர்தான் என்று சில ஜாதிச் சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் உரிமை கொண்டாடினர். போதிய ஆதாரம் இல்லாததால் இவர்களின் வழக்கை தள்ளுபடி செய்தது பிரிட்டிஷ் அரசு.

தென் இந்தியாவில் வன்னியர் மட்டுமே "க்ஷத்ரியர்" என அரசாணை எண் 271/1929 கெசட்டிலும் வெளியிட்டனர்.

வன்னிய குல க்ஷத்ரியர்  என்ற நம் சாதி பெயரை பெறுவதற்கே 60 ஆண்டுகள் போராட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

நம் சமுதாயத்திற்கு "க்ஷத்ரியர்" என்ற பட்டம் சாதரணமாக கிடைத்து விட வில்லை.

கிட்ட தட்ட பல ஆயிரம் காலமாக ஆண்ட பரம்பரையில் கல்வி, பொருளாதாரம், ஆட்சியில் உயர்ந்த நிலையில் இருந்து வந்த நாம் இடைப்பட்ட கால அந்நிய படையெடுப்புகளினாலும், நம் எதிரிகளின் சூழ்ச்சிகளினாலும் ஆட்சி அதிகாரத்தை இழந்தோம்,

நம் வரலாற்றையும், கல்வியையும் தொலைத்து 600 ஆண்டுகள் ஆகி அனைத்திலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டோம்.

வன்னி நாடு பல மரபார் ஆட்சிக்கு உட்பட்டு கடைசியாக வந்த ஆங்கிலேயன் நம்மை கீழ் ஜாதி வரிசையில் 8 வது இடத்தில் " பள்ளி " என்று நம்மை இணைக்க பார்த்த போது நம் குல முன்னோர்கள் கொதித்து எழுந்தனர்.

நம் சமுதாய மக்கள் எங்களை "வன்னிய குல க்ஷத்ரியர் "என்றே குறிக்க வேண்டும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரியிடம் முறையிட்டு நாடு முழுதும் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் வெடிக்க செய்தனர்.

1872 ஆம் ஆண்டு குன்னம் முனுசாமி பிள்ளை அவர்களது "ஜாதி சங்கிரச்சாரம்" என்ற நூலில் வன்னியர்களை பற்றி விரிவாக சான்றுகளுடன் விளக்கப்பட்டு இருந்தன.

காஞ்சிபுரம் ஆறுமுக நாயகர் 1907 இல் " சாதி கண்ணாடி " என்று பொருள் படும் " வருண தருப்பணம் " எனும் நூலை வெளியிட்டார்.

குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள் வன்னிய குல க்ஷத்ரிய மகா சங்கத்தின் ஆய்வாளராக செயல்பட்டார்.

மஹா சங்க பிரதேச காரியதரிசியாக இருந்த அய்யா கா. அண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு " வன்னிய குல விளக்கம் " என்ற அறியதோர் ஆராய்ச்சி நூலை எழுதி அய்யா கா.கோபால் நாயக்கர் அவர்கள் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார்.

 

அக்காலத்தில் மஹா சங்க உள்ளூர் காரியதரிசியாயிருந்தவரும் அரசாங்க கல்விச்சாலை மேற்பார்வையாளருமான அய்யா அய்யாகண்ணு நாயக்கர் B.A. அவர்களைக் கொண்டு தமிழில் அச்சிட்டு வெளியிட்ட வன்னி குல விளக்கத்தை ஆங்கிலத்தில் எழுதும்படி செய்து அதையும் தன் சொந்த செலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும், அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னிய குல க்ஷத்ரியர் என்பதை அய்யா கா.கோபால் நாயக்கர் நிலைநாட்டி சென்றார்.

அந்த ஆங்கில புத்தகத்தை கோதாவரி ஜில்லா கோரிங்கா அக்னி குல க்ஷத்ரிய சங்க தலைவர் அய்யா திருவாளர். இலட்சுமணசாமி வர்மா அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்து அவர் சொந்த செலவில் அச்சிட்டு வடநாட்டில் பரவச்செய்தார்.

பல்வேறு இலக்கியங்களில் வன்னியர்களை பற்றிய குறிப்புகளும், கல்வெட்டு செய்திகளையும், வட மொழி சூத்திரங்களையும், தாமிர செப்பேடு செய்திகளையும், ஓலைச் சுவடிகளையும், சிலசாசனங்களையும், பல மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று அலைந்து திரிந்து சேகரித்து மேற்கண்ட புத்தகமாக அச்சிட்டு இருந்தார்கள்.

சென்னை மாநில கல்லூரி சம்ஸ்கிருத பேராசிரியர்களை கொண்டு அவைகள் உண்மையானவையா? என்று சான்றுகள் பெற்று இணைத்து இருந்தனர்.

மேற்கண்ட பல நூல்கள் வடிவில் சமர்பிக்கபட்ட சான்றுகளை சரி பார்த்த ஆங்கில அரசு இறுதியில் நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என்று ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என்று மேற்படி அரசாணை மூலம் அறிவித்தது.

வன்னியர் அல்லது பள்ளி என்போர் எல்லா ஆவணங்களிலும் வன்னிய குல க்ஷத்ரியர் " என்று குறிப்பிடலாம் என்று ஆங்கில அரசு அரசானை வெளியிட்டது.

தெலுங்கு பேசும் வன்னியர் அன்று சீமந்திரா பகுதி தமிழகத்துடன் இணைந்து இருந்த பகுதி அங்கு நம் மக்கள் அதிக அளவில் வசிகின்றனர்,

அவர்கள் தங்களை அக்னி குல க்ஷத்ரியர் என்கின்றனர்.

மேலும் கோலார், பெங்களுர், மைசூர், பகுதிகளில் வாழும் வன்னியர்கள் தங்களை "திகளர் " மற்றும் "சம்பு குல க்ஷத்ரியர்கள்" என்கின்றனர்.

அரசாணை வெளியீடு 1929 ஆம் ஆண்டு ஜூன்13 சென்னை மாகான சட்டதுறை மூலம் அரசாணை எண் 271ல்,

 தமிழ்நாட்டில்

" வன்னிய குல க்ஷத்ரியர் "     என்றும்,

 தெலுங்கு பேசும் ஆந்திரா பகுதியில்,

" அக்னி குல க்ஷத்ரியர் "

என்றும் குறிபிடபடுவர் என்று அரசு அறிவித்தது.

வன்னியர், பள்ளி என்று இருந்த நம் ஜாதிப் பெயரை சுமார் 60 ஆண்டுகள் போராடி "வன்னியகுல க்ஷத்ரியர் " மற்றும் அக்னி குல க்ஷத்ரியர் என்று பெயர்களை பெற்று தந்தனர் நம் குல முன்னோர்கள்.

அன்று முதல் ஜாதிச் சான்றிதழ்களிலும், பத்திரங்களிலெல்லாம் நமது ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என்று எழுத தொடங்கினார்கள்.

சரித்திர பெருமை மிக்க தென்னிந்திய ராஜபுத்திரர்களாகிய நமக்கு " வன்னிய குல க்ஷத்ரியர் " என அரசானை கிடைக்க பெரும் பாடுபட்ட நம் குல முன்னோர்கள் கீழ்வருமாறு.

1. வன்னிய குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை "வன்னி குலோத்தாரணர்" அய்யா ஶ்ரீமான் கா.கோபால் நாயக்கர் அவர்கள்.

2. அக்னி குல க்ஷத்ரிய மஹா சங்கத்தின் தந்தை அய்யா P.லட்சுமண சுவாமி வர்மா அவர்கள்.

3. "வன்னிகுலோபகாரி" அய்யா புண்ணமை மு.தியாகராயர் நாயக்கர் அவர்கள்.

4. "ராவ் சாயப்" அய்யா .செல்லப்ப நாயக்கர் அவர்கள்.

5. ராவ் பஹதூர் அய்யா ஆற்காடு .தனகோட்டி முதலியார்.

6. மகாநாடு அய்யா அரங்கநாத நாயக்கர் அவர்கள்.

7. மகாநாடு அய்யா .சிங்காரவேலு நாயக்கர் அவர்கள்.

8. "மஹா சங்க கேப்டன்"அய்யா தூசி.இராஜகோபால் பூபதி நாயக்கர் அவர்கள்.

9. "வன்னி குல போஷகர்" அய்யா இரங்கூன் வெங்கடசாமி நாயக்கர் அவர்கள்.

10. அய்யா தி.அய்யாகண்ணு நாயக்கர் அவர்கள்.

11. அய்யா குன்னம் முனுசாமி பிள்ளை அவர்கள்.

12. " வன்னிய குல அறிஞர் " அய்யா கா.அண்ணாசாமி நாயக்கர் அவர்கள்.

13. " வன்னிய ரிஷி " அய்யா கா.ஆறுமுகம் நாயக்கர் அவர்கள்.

14. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொது செயளாலர் அய்யா பிரம்மானந்த ராவ் வர்மா அவர்கள்.

15. அக்னி குல க்ஷத்ரிய சங்கத்தின் பொருளாளர் அய்யா பல்லவ கேசரி சத்திய ராஜீ அவர்கள்.

16. பாயக்காரிகளின் பாதுகாவலர் அய்யா அத்திபாக்கம் .வெங்கடாசலம் நாயக்கர் அவர்கள்.

17. வன்னிய குல க்ஷத்ரிய சமுதாய தந்தை "தேசிய கவிச்சிங்கம்" "இராஜரிஷி" அய்யா சு.அர்த்தநாரீச வர்மா நாயக்கர் அவர்கள்.

18. பல்லவ குலசேகரா் அய்யா கா.கோ.பலபத்திரா் நாயக்கர் அவர்கள்.

வன்னியர், பள்ளி என்றிருந்த நம் ஜாதிப்பெயரை வன்னிய குல க்ஷத்ரியர் என நமக்கு பெற்றுதந்த நம் முன்னோர்களை இன்று நாம் போற்றி வணங்குவதோடு, நம் முன்னோர்கள் போல நாமும் நம் குல மக்களுக்கு குலப்பணியும், நன்மையும் செய்வோம், தர்மமும் செய்வோமாக.

அவர்களைப் போல் நாமும் வாழ்ந்து காட்டுவோம்.

ஓம் நமசிவாய நமஹ

🛕🛕🌳🌳🔥🙏🏻🔥🌳🌳🛕🛕

 அன்புடன்

 மஹாரிஷி ஜம்பு ஆன்மீக மஹா சபா.

 தொண்டை மண்டலம்வன்னிய குல க்ஷத்ரியா் 

Tuesday, January 12, 2016

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர்

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர் வரலாறு:-
அக்னியில் எழுந்தருளுதல்


ஓங்காரநந்தா அவர்களுடன்

அக்னியில் தவம்
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.
மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.
சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது
சித்தரும் சித்தவைத்தியமும் :-
மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.
மகாதேவ மலை சித்தர் அமைவிடம்.....
சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.

Sunday, August 16, 2015

Tulsiramanastrology - திருமண நட்சத்திர பொருத்தம்

http://tulsiramanastrology.com is a nicely built tamil astrology website. The home shows yearly predicitons for virodhi tamil new year. The twelve zodic signs Mesha, Rishaba, Mithuna, kadaka, simma, kanya, thula, virichika, thanush, makara, kumbha and meena are listed.


திருமண நட்சத்திர பொருத்தம்
பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் பொருத்தம்
அஸ்வனி
(மேஷராசி)
பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்) மத்திமம்
பரணி
(மேஷராசி)
அஸ்வனி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதி உத்தமம்
சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்) மத்திமம்
கார்த்திகை
1வது,பாதம்
(மேஷராசி)
அஸ்வனி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்
கார்த்திகை
2,3,4வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - அவிட்டம் - கேட்டை  - அஸ்தம் - பூரம் - ரோகிணி மத்திமம்
ரோகிணி
(ரிஷப ராசி)
பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம்  - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வனி மத்திமம்
மிருகசீரிஷம்
1&2வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம் மத்திமம்
மிருகசீரிஷம்
3&4வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணி மத்திமம்
திருவாதிரை
(மிதுன ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது  பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் -  உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வனி மத்திமம்
புனர்பூசம்
1,2,3வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணி மத்திமம்
புனர்பூசம்
4வது பாதம்
(கடக ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை -  பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம்  - உத்திரட்டாதி - சதயம் உத்தமம்
ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணி மத்திமம்
பூசம்
(கடக ராசி)
ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி  - ரேவதி சதயம் உத்தமம்
அஸ்வனி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம் மத்திமம்
ஆயில்யம்
(கடக ராசி)
கார்த்திகை -  மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதி உத்தமம்
பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம் மத்திமம்
மகம்
(சிம்ம ராசி)
பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதி மத்திமம்
பூரம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்)  -  அவிட்டம் – பூரட்டாதி – ரேவதி உத்தமம்
திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம் மத்திமம்
உத்திரம்
1வது பாதம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம்  மத்திமம்
உத்திரம்
2,3&4 பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம் மத்திமம்
அஸ்தம்
(கன்னி ராசி)
பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதி உத்தமம்
பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதி மத்திமம்
சித்திரை
1&2வது பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம் உத்தமம்
ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணி மத்திமம்
சித்திரை
3&4வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம் உத்தமம்
ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் –  புனர்பூசம் – பரணி மத்திமம்
சுவாதி 
(துலாம் ராசி)
பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்) மத்திமம்
விசாகம்
1,2,3வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்). உத்தமம்
ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம் மத்திமம்
விசாகம் 
4வது பாதம்
(விருச்சிக ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம் உத்தமம்
கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி    - ஆயில்யம் - ரேவதி மத்திமம்
அனுஷம் 
(விருச்சிக ராசி)
ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம்  - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்) உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வனி மத்திமம்
கேட்டை
(விருச்சிக ராசி)
கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம் உத்தமம்
உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணி மத்திமம்
மூலம் 
(தனுசு ராசி)
திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம் மத்திமம்
பூராடம்
(தனுசு ராசி)
மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) -  மகம் – உத்திரம் – சித்திரை  - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது  – பூரட்டாதி – ரேவதி உத்தமம்
திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) -  அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம் மத்திமம்
உத்திராடம் 
1வது,பாதம்
(தனுசு ராசி)
திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
அஸ்வனி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதி மத்திமம்
உத்திராடம் 
2,3,4வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் –
திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி
உத்தமம்
ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்
திருவோணம் 
(மகர ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் –
கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி
உத்தமம்
மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதி மத்திமம்
அவிட்டம்
1&2வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம் மத்திமம்
அவிட்டம் 
3&4வது,பாதம்
கும்ப ராசி
கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம் உத்தமம்
பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வனி
உத்திரட்டாதி
மத்திமம்
சதயம் 
கும்ப ராசி
மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம் -  உத்தமம்
ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வனி மத்திமம்
பூரட்டாதி 
1,2,3வது பாதம்
கும்ப ராசி
அஸ்வனி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம்  - மூலம் – அவிட்டம் - சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம்  மத்திமம்
பூரட்டாதி 
4வது, பாதம்
(மீன ராசி)
மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம்  - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதி மத்திமம்
உத்திரட்டாதி
(மீன ராசி)
ரோகிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி  – ரேவதி உத்தமம்
அவிட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்) மத்திமம்
ரேவதி 
(மீன ராசி)
கார்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்)
சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி
உத்தமம்
சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்) - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்) மத்திமம்