Monday, September 16, 2013

108 சித்தர்கள் 108 SIDDHARGAL


108 சித்தர்கள்  108 SIDDHARGAL
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள்.  பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு ;  சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு ; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு, யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சித்தர்கள் மீவியற்கை (Supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல் வாதிகள் அல்ல. “மெய்ப்புலன் காண்பது அறிவு” என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.,சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (Existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (Understanding), அறநிலை உணர்வை (External awareness), மெய்யடைதலை (Actuality) சித்தி எய்தல் எனலாம். மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே. சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள்.
 

முதல் தகுதி:      சித்தத்தை அடக்கவல்லவர்கள்.
இரண்டாம் தகுதி:      எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.
மூன்றாம் தகுதி:     முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.
நான்காம் தகுதி:     பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.
ஐந்தாம் தகுதி:      உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள். இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.

 1. திருமூலர் - சிதம்பரம்.
  2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர்கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி -
பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் -
திருப்பதி, திருமலை

6. மச்சமுனி -
திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர்
என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி
சித்தர் திருவரங்கம்.
9. அகத்தியர்திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர்
பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் -
மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் -
கும்பகோணம்.

14.
உரோமரிசி - திருக்கயிலை

15.
காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் -
திருவண்ணாமலை

17.
குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18.
பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19.
புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20.
திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21.
அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22.
நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் -
அழகர் மலை

24.
மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25.
புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26.
காசிபர் - ருத்ரகிரி
27.
வரதர் - தென்மலை
28.
கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29.
தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்

30.
நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31.
காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32.
விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33.
கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34.
கமல முனி - ஆரூர்

35.
சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36.
சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் -
திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38.
வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39.
அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40.
பட்டினத்தார் - திருவொற்றியூர்.

41.
வள்ளலார் - வடலூர்.

42.
சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43.
சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44.
ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45.
ராகவேந்திரர் - மந்திராலயம்.

46.
ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47.
குமரகுருபரர் - காசி.
48.
நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49.
ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50.
ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51.
சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52.
ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53.
பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54.
யுக்தேஸ்வரர் - பூரி.

55.
ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56.
ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57.
கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58.
சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59.
குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60.
ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61.
பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62.
குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63.
முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64.
இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65.
அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66.
பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67.
மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68.
சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69.
ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70.
வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71.
சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72.
சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73.
கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74.
நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75.
அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76.
சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77.
சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78.
சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79.
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80.
அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81.
மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82.
கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83.
பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84.
கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85.
சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86.
தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87.
தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88.
ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89.
வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90.
லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91.
மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92.
சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94.
கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95.
தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96.
நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97.
போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98.
அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99.
வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100.
தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101.
மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102.
குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103.
வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104.
பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105.
குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106.
பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107.
மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108.
பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.



பதினெண் சித்தர்களும்
சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.


இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.


                           மதுரை
அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்
இராமதேவர் - அழகர்மலை
அகஸ்தியர் - திருவனந்தபுரம்
கொங்கணர் - திருப்பதி
கமலமுனி - திருவாரூர்
சட்டமுனி - திருவரங்கம்
கரூவூரார் - கரூர்
சுந்தரனார் - மதுரை
வான்மீகர் - எட்டிக்குடி
நந்திதேவர் - காசி
பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்
போகர் - பழனி
மச்சமுனி - திருப்பரங்குன்றம்
பதஞ்சலி - இராமேஸ்வரம்
தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் - பொய்யூர்
குதம்பை சித்தர் - மாயவரம்
இடைக்காடர் - திருவண்ணாமலை
சக்தி மிகுந்த சித்தர்களை வணங்கி அருள் பெறுக. நலம் பெறுக.

Posted by : R. SAKTHIVEL - 9841787137
mail: monoindiadotcom@gmail.com