Tuesday, January 12, 2016

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர்

ஸ்ரீலஸ்ரீ மஹா ஆனந்த சித்தர் வரலாறு:-
அக்னியில் எழுந்தருளுதல்


ஓங்காரநந்தா அவர்களுடன்

அக்னியில் தவம்
தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் 6-12-1930-ல் பிறந்து நறுமணம் கமழும் மஞ்சள் விற்பனை செய்தவர். அவர் தனது 35-ம் வயதில் காளஹஸ்த்தி சிவபெருமானால் தமிழகத்தின் பல திருகோவில்களில் திருப்பணி செய்தார். பின்பு ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி லோகுவாகுளம் பரத்வாஜீஸ்வரர் திருகோவிலில் அன்னதானம் செய்து வந்தார். 2002-ம் வருடம் 25-ம் நாள் இரவு 12மணியளவில் மஹா ஆனந்தர் முன் சிவபெருமான் தேர்ன்றி "நிவிர் பிறவிப் போற்றுத்தவர்". " நிவிர் ஆயிரம் ஆண்டுகள் வாழம் பேறு பெற்ற சித்தர்" நிவிர் மஹாதேவமலை சென்று குகையனுள் குடிகொண்டு, எம்மை வழிபட்டு பக்தர்களைக் காத்துக் கடவாயாக என்று கூறி மறைந்தார்.
மகா ஆனந்த சித்தர் இறைவனின் கட்டளைக்கிணங்க புறப்பட்டு மகா தேவமலையை அடைந்தார் இறைவன் மீண்டும் மகா ஆனந்த சித்தர் முன் தோன்றி நீவிர் இனி பல் துலக்குவதும், நீராடுவதும் சித்திரை-1அன்றே என்றும், நீவிர் எவரிடமும் தர்மம் கேட்கக்கூடாது என்றும், "சகல செல்வங்களும் இங்கு வந்து குவியும்" என்றும்,இம்மலைக்கு வருகை புரியும் பக்தர்களுக்கும் இம்மலையின் வாழும் அனைத்து ஜிவராசிகளையும் தீவினை நொடிகளிலிருந்து காக்க வேண்டும் என்றும், இனி தாங்கள் உணவு உண்ணவோ, தாகத்திற்கு நீர் அருந்தவோ கூடாது என்று கூறி இறைவன் மறைந்தார்.
சிவபெருமான் சிரசின் மீது அமர்ந்துள்ள ஐந்து தலை நாகத்தின் வடிவே சுவாமிகளின் சிரசின் மீது காணும் வடிவாகும்.இதற்கு சுவாமிகள் நாடொறும் மணம் கமழம் மலர்களையும், நறுமணம் வீசும் இலைகளையும் வைத்து பூஜிக்கின்றார்.
நெருப்பின் மீது படுத்தும் தியானம் செய்திடும் சித்தர் பிரான் இவர். உயிர் வாழ உணவு இன்றியமையாததுதான் எனினும் உண்ணாமலும் உயிர் வாழ்வதும் சாத்தியமே என வாழ்ந்து காட்டிவரும் சிதத புருஷர் மகானந்தர், பல ஆண்டுகளா எவ்வகை உணவும் உண்பதில்லை, தண்ணிரும் அருந்துவதில்லை என்பது வியக்கத்தக்கது
சித்தரும் சித்தவைத்தியமும் :-
மானிட இனத்துக்கும் பெருமக்கள் வழங்கிய அரிய நன்கொடை சித்த மருத்துவம். நம் மகானந்த சித்தர் அவ்வரிசையில் அபூர்வ மூலிகைகளை போகர் சித்தர் திருவருளால் அறியப்பெற்று தீராத வியாதிகளை தீர்த்து வைக்கிறார். யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய முப்பெரும் சிறப்பு வாய்க்கப்பெற்றவர் நம் மகா ஆனந்த சித்தர். அரிய மூலிகை மருந்துகளால் வாய்பேச நிலையினர் குணம்பெற்றுள்ளனர். பிள்ளைப்பேறு இல்லாதோர் மகா ஆனந்த சித்தரை அணுகி வேண்ட ஸ்வாமிகள் இறைவனின் அருட்சக்தியாலும் தன் தவவலியாலும் வில்வம், விபூதி, மருந்து அளித்தால் மலடு நிங்கி மகப்பேறு அடைகின்றனர்.
மகாதேவ மலை சித்தர் அமைவிடம்.....
சென்னை-பெங்களுர் இருப்புப்பாதையில் முக்கிய ரயில் சந்திப்பு காட்பாடி. காட்பாடியிலிருந்து மேற்கே குடியாத்தம் செல்லும் நெடுஞ்சாலையில் 19 வது கிலோ மீட்டரில் மகாதேவ மலைகான வரவேற்பு வளைவு உள்ளது. குடியாத்தம் நகரிலிருந்து காட்பாடி 11 வது கி. மீ தொலைவில் மகாதேவ மலை வரவேற்பு வளைவு உள்ளது.

Sunday, August 16, 2015

Tulsiramanastrology - திருமண நட்சத்திர பொருத்தம்

http://tulsiramanastrology.com is a nicely built tamil astrology website. The home shows yearly predicitons for virodhi tamil new year. The twelve zodic signs Mesha, Rishaba, Mithuna, kadaka, simma, kanya, thula, virichika, thanush, makara, kumbha and meena are listed.


திருமண நட்சத்திர பொருத்தம்
பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் பொருத்தம்
அஸ்வனி
(மேஷராசி)
பரணி - திருவாதிரை - பூசம் - அனுஷம் - பூராடம் - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
பூரட்டாதி - அவிட்டம் - உத்திராடம் - விசாகம் - பூரம் - புனர்பூசம் – மிருகசீரிஷம் - சித்திரை - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்) மத்திமம்
பரணி
(மேஷராசி)
அஸ்வனி - கார்த்திகை 1வது – மிருகசீரிஷம் - புனர்பூசம் - ஆயில்யம் - சித்திரை(3&4வது பாதம்) - விசாகம் - கேட்டை - மூலம் - உத்திராடம் - ரேவதி உத்தமம்
சதயம் - திருவோணம் - சுவாதி - திருவாதிரை கார்த்திகை(2,3&4வது பாதம்) - மகம் – விசாகம்(4வது பாதம்) மத்திமம்
கார்த்திகை
1வது,பாதம்
(மேஷராசி)
அஸ்வனி - பரணி - திருவாதிரை - பூசம் - அஸ்தம் -சுவாதி - அனுஷம் - மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
மிருகசீரிஷம் - மகம் - சித்திரை - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்
கார்த்திகை
2,3,4வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - பரணி - பூசம் - மகம் - சுவாதி - அனுஷம்-மூலம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - அவிட்டம் - கேட்டை  - அஸ்தம் - பூரம் - ரோகிணி மத்திமம்
ரோகிணி
(ரிஷப ராசி)
பரணி - கார்த்திகை - மிருகசீரிஷம்  - புனர்பூசம்(4வது பாதம்) - ஆயில்யம் – உத்திரம்(1வது பாதம்) – சித்திரை(3&4வது பாதம்)- விசாகம் - கேட்டை - உத்திராடம் - அவிட்டம் - பூரட்டாதி - ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி - அனுஷம் - பூசம் - புனர்பூசம்(1,2&3வது பாதம்) - அஸ்வனி மத்திமம்
மிருகசீரிஷம்
1&2வது பாதம்
(ரிஷப ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - பூசம் - உத்திரம் (1வது பாதம்) - அனுஷம் - மூலம் – உத்திராடம்(2,3&4வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - விசாகம் - ஆயில்யம் - சுவாதி – புனர்பூசம்(4வது பாதம்) - பரணி - பூராடம் மத்திமம்
மிருகசீரிஷம்
3&4வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - கார்த்திகை - ரோகிணி - திருவாதிரை - உத்திரம் - அஸ்தம் - அனுஷம் - மூலம் - உத்திராடம் (1வது பாதம்) - திருவோணம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை - சுவாதி - விசாகம் - பூசம் - பூராடம் – புனர்பூசம்(1,2&3வது பாதம்) - பரணி மத்திமம்
திருவாதிரை
(மிதுன ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2&3வது)-பூரம் – சித்திரை(1&2வது  பாதம்) - பூராடம் - அவிட்டம்-விசாகம்(4வது) - பூரட்டாதி - ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி - உத்திராடம் - மூலம் -  உத்திரம் - மகம் - புனர்பூசம் (4வது பாதம்) - கார்த்திகை - அஸ்வனி மத்திமம்
புனர்பூசம்
1,2,3வது பாதம்
(மிதுன ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை - பூசம் - சித்திரை (1&2வது பாதம்) - அனுஷம் - மூலம் - அவிட்டம் - சதயம் - உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி - திருவோணம் - பூராடம் - கேட்டை - அஸ்தம் - பூசம் - ஆயில்யம் – சித்திரை(3&4வது பாதம்) - சுவாதி - ரோகிணி மத்திமம்
புனர்பூசம்
4வது பாதம்
(கடக ராசி)
அஸ்வனி - மிருகசீரிஷம் - திருவாதிரை -  பூசம் சித்திரை - சுவாதி - அனுஷம் - மூலம் - அவிட்டம்  - உத்திரட்டாதி - சதயம் உத்தமம்
ரேவதி - திருவோணம் - கேட்டை - பூராடம் - அஸ்தம் - ஆயில்யம் - ரோகிணி - பரணி மத்திமம்
பூசம்
(கடக ராசி)
ரோகிணி - திருவாதிரை - புனர்பூசம் - ஆயில்யம்-அஸ்தம் - சுவாதி - விசாகம் - பூரட்டாதி  - ரேவதி சதயம் உத்தமம்
அஸ்வனி - கார்த்திகை - மிருகசீரிஷம் - உத்திரம் - சித்திரை - மூலம் - உத்திராடம் (2,3&4வது பாதம்) - அவிட்டம் - மகம் மத்திமம்
ஆயில்யம்
(கடக ராசி)
கார்த்திகை -  மிருகசீரிஷம் - புனர்பூசம் – பூசம் – சித்திரை – விசாகம்(1,2&3வது பாதம்) - அனுஷம் – அவிட்டம் – பூரட்டாதி – உத்திரட்டாதி உத்தமம்
பரணி – ரோகிணி –திருவாதிரை – அஸ்தம் – உத்திரம்(2,3&4வது பாதம்)- உத்திராடம் – திருவோணம் - சதயம் மத்திமம்
மகம்
(சிம்ம ராசி)
பரணி – திருவாதிரை – பூசம் – சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
கார்த்திகை – பூரம் – சித்திரை(3&4வது பாதம்) – அஸ்தம் அவிட்டம் – பூரட்டாதி மத்திமம்
பூரம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – கார்த்திகை - திருவாதிரை - மகம் – உத்திரம்1 – சித்திரை3&4 – விசாகம் – கேட்டை – உத்திராடம்(2.3&4வது பாதம்)  -  அவிட்டம் – பூரட்டாதி – ரேவதி உத்தமம்
திருவாதிரை - சுவாதி - மூலம் - திருவோணம் - சதயம் மத்திமம்
உத்திரம்
1வது பாதம்
(சிம்ம ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – பூரம் - சுவாதி – அனுஷம் – திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி – அவிட்டம் – கேட்டை - ஆயில்யம் – மிருகசீரிஷம் - பூராடம் - மூலம்  மத்திமம்
உத்திரம்
2,3&4 பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – பரணி – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் –பூரம் - அஸ்தம் – அனுஷம் – மூலம் – பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
ரேவதி – அவிட்டம்(3&4வது பாதம்) – கேட்டை – சுவாதி - ஆயில்யம் – மிருகசீரிஷம் மத்திமம்
அஸ்தம்
(கன்னி ராசி)
பரணி – கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் - உத்திரம் – சித்திரை(1&2வது பாதம்) – விசாகம்(4வது பாதம்) – கேட்டை – பூராடம் – உத்திராடம்(1வது பாதம்) – அவிட்டம்(3&4வது பாதம்) - பூரட்டாதி – ரேவதி உத்தமம்
பூசம் - மகம் - அனுஷம் - உத்திரட்டாதி மத்திமம்
சித்திரை
1&2வது பாதம்
(கன்னி ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் – மகம் – அஸ்தம் – அனுஷம் – மூலம் – சதயம் உத்தமம்
ரேவதி - விசாகம் – பூரம் – ஆயில்யம் – புனர்பூசம் – பரணி மத்திமம்
சித்திரை
3&4வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – கார்த்திகை – ரோகிணி – திருவாதிரை – பூசம் - அஸ்தம் - சுவாதி – மூலம் – திருவோணம் உத்தமம்
ரேவதி – விசாகம் – பூரம் – கேட்டை - ஆயில்யம் –  புனர்பூசம் – பரணி மத்திமம்
சுவாதி 
(துலாம் ராசி)
பரணி – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) – புனர்பூசம் – ஆயில்யம் - கேட்டை - பூராடம் – பூரம் – சித்திரை - விசாகம் – ரேவதி உத்தமம்
உத்திரட்டாதி – உத்திரம் – உத்திராடம் – கார்த்திகை - பூசம் - மகம் - மூலம் - பூரட்டாதி - அவிட்டம்(1&2வது பாதம்) மத்திமம்
விசாகம்
1,2,3வது பாதம்
(துலாம் ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – மூலம் –அவிட்டம்(1&2வது பாதம்). உத்தமம்
ரேவதி – அஸ்தம் – பூரம் – ஆயில்யம் – ரோகிணி – பரணி - அனுஷம் - கேட்டை – அவிட்டம்(3&4வது பாதம்) - சதயம் மத்திமம்
விசாகம் 
4வது பாதம்
(விருச்சிக ராசி)
அஸ்வனி – மிருகசீரிஷம் – திருவாதிரை – பூசம் – மகம் - சித்திரை - சுவாதி – அனுஷம் – மூலம் – அவிட்டம் – சதயம் உத்தமம்
கேட்டை – அஸ்தம் – பூரம் – ரோகிணி – பரணி    - ஆயில்யம் - ரேவதி மத்திமம்
அனுஷம் 
(விருச்சிக ராசி)
ரோகிணி – புனர்பூசம் – ஆயில்யம் – அஸ்தம் –சுவாதி – விசாகம்  - சதயம் – திருவோணம் – பூரட்டாதி(1,2&3வது பாதம்) உத்தமம்
ரேவதி - பூரட்டாதி - கேட்டை – சித்திரை – உத்திராடம் (2,3&4 பாதம்)- உத்திரம் – மகம் – மிருகசீரிஷம் – கார்த்திகை - அஸ்வனி மத்திமம்
கேட்டை
(விருச்சிக ராசி)
கார்த்திகை – மிருகசீரிஷம் – புனர்பூசம் – பூசம் – உத்திரம் - சித்திரை – விசாகம் – அனுஷம் –அவிட்டம் உத்தமம்
உத்திரட்டாதி - பூரட்டாதி - திருவோணம் - உத்திராடம் - அஸ்தம் – சுவாதி - பூரம் – ரோகிணி – பரணி மத்திமம்
மூலம் 
(தனுசு ராசி)
திருவாதிரை –பூசம் – பூரம் – அஸ்தம் – சுவாதி – சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – விசாகம் – சித்திரை – உத்திரம் – புனர்பூசம் – மிருகசீரிஷம்(3&4வது பாதம்) - பூராடம் திருவோணம் - அவிட்டம் மத்திமம்
பூராடம்
(தனுசு ராசி)
மிருகசீரிஷம் – புனர்பூசம் (1,2&3வது பாதம்) -  மகம் – உத்திரம் – சித்திரை  - விசாகம் – கேட்டை – மூலம் - உத்திராடம் 1வது  – பூரட்டாதி – ரேவதி உத்தமம்
திருவாதிரை - ஆயில்யம் - புனர்பூசம் (4வது பாதம்) -  அஸ்தம் - சுவாதி - உத்திராடம் (2,3&4வது பாதம்) - திருவோணம் - அவிட்டம் மத்திமம்
உத்திராடம் 
1வது,பாதம்
(தனுசு ராசி)
திருவாதிரை – பூசம் – மகம் - பூரம் – அஸ்தம் – சுவாதி – அனுஷம் – மூலம் - பூராடம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
அஸ்வனி - பரணி - மிருகசீரிஷம் - ஆயில்யம் - கேட்டை - திருவோணம் - அவிட்டம் - ரேவதி மத்திமம்
உத்திராடம் 
2,3,4வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – பரணி – பூசம் – மகம் – பூரம் – அஸ்தம் – சுவாதி - அனுஷம் – மூலம் - பூராடம் –
திருவோணம் – சதயம் – உத்திரட்டாதி
உத்தமம்
ரோகிணி - ஆயில்யம் - கேட்டை - அவிட்டம் - ரேவதி மத்திமம்
திருவோணம் 
(மகர ராசி)
பரணி - மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - சித்திரை – பூரம் - விசாகம் –
கேட்டை – பூராடம் - உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி - ரேவதி
உத்தமம்
மகம் - பூரம் - உத்திரம்(1வது பாதம்) - அனுஷம் - மூலம் - உத்திரட்டாதி மத்திமம்
அவிட்டம்
1&2வது பாதம்
(மகர ராசி)
அஸ்வனி – கார்த்திகை – பூசம் – உத்திரம்(2,3&4வது பாதம்) - அஸ்தம் – சுவாதி – அனுஷம் - மூலம் – உத்திராடம் - திருவோணம் – சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – பூராடம் – விசாகம் – ஆயில்யம் – புனர்பூசம் - கார்த்திகை(2,3&4 பாதம்) - கேட்டை - உத்திரம் - மகம் மத்திமம்
அவிட்டம் 
3&4வது,பாதம்
கும்ப ராசி
கார்த்திகை - பூசம் - மகம் - உத்திரம் - அஸ்தம் - சுவாதி - அனுஷம் - மூலம் - உத்திராடம் - திருவோணம் - சதயம் உத்தமம்
பூராடம் - கேட்டை - விசாகம் - பூரம் - ஆயில்யம் - புனர்பூசம்(4வது பாதம்) - திருவாதிரை - ரோகிணி - அஸ்வனி
உத்திரட்டாதி
மத்திமம்
சதயம் 
கும்ப ராசி
மிருகசீரிஷம் – புனர்பூசம் – ஆயில்யம் – பூரம் – சித்திரை – விசாகம் – கேட்டை – பூராடம் - அவிட்டம் -  உத்தமம்
ரேவதி – பூரட்டாதி – உத்திராடம் – மூலம் – அனுஷம் – உத்திரம் - பூசம் - புனர்பூசம் - அஸ்வனி மத்திமம்
பூரட்டாதி 
1,2,3வது பாதம்
கும்ப ராசி
அஸ்வனி - மிருகசீரிஷம் (1&2 பாதம்)– பூசம் – மகம் - சித்திரை – சுவாதி – அனுஷம்  - மூலம் – அவிட்டம் - சதயம் உத்தமம்
உத்திரட்டாதி – திருவோணம் – பூராடம் – கேட்டை – அனுஷம் – அஸ்தம் - ஆயில்யம்  மத்திமம்
பூரட்டாதி 
4வது, பாதம்
(மீன ராசி)
மிருகசீரிஷம் – திருவாதிரை – சித்திரை(1&2 பாதம்) –அனுஷம்  - மூலம் – அவிட்டம் – சதயம் – உத்திரட்டாதி உத்தமம்
திருவோணம் – பூராடம் – கேட்டை - அஸ்தம் – பூசம் - சுவாதி மத்திமம்
உத்திரட்டாதி
(மீன ராசி)
ரோகிணி – திருவாதிரை – புனர்பூசம்(2&3 பாதம்) – அஸ்தம் – கேட்டை - திருவோணம் - சதயம் - பூரட்டாதி  – ரேவதி உத்தமம்
அவிட்டம் – உத்திராடம் - மூலம் - சுவாதி – ஆயில்யம் - உத்திரம்(3&4வது பாதம்)- புனர்பூசம்(4வது பாதம்) – கார்த்திகை(2,3&4வது பாதம்) மத்திமம்
ரேவதி 
(மீன ராசி)
கார்த்திகை(2,3&4வது) – மிருகசீரிஷம் – புனர்பூசம்(1,2 &3வது பாதம்) - உத்திரம்(2,3&4வது பாதம்)
சித்திரை(1&2வது பாதம்) - விசாகம் – அனுஷம் – உத்திராடம் – உத்திரட்டாதி
உத்தமம்
சதயம் – திருவோணம் – விசாகம் – அஸ்தம் – பூசம் – பூராடம் - புனர்பூசம்(4வது பாதம்) - ரோகிணி – கார்த்திகை(1வது பாதம்) மத்திமம்

Saturday, January 11, 2014

வர்மக் கலை Varmam - அகத்தியர்



வர்மக்கலை (Varmam)
வர்மக்கலை (Varmam) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும்.வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. 
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்


வர்மங்களின் வகைகள்

படுவர்மம்
நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்
இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்
ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்
பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அகத்தியர்.


உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...

தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37
திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13
தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15
உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10
மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்

கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9
வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்

கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19
முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்

கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..

எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!
தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

தட வர்மம்
"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து 
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"
-
அகத்தியர் -

நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால்  முடியாது போய்விடும்.

முடக்கு வர்மம்
"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"
- அகத்தியர்
இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன்,  அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். 
அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.