Saturday, January 11, 2014

வர்மக் கலை Varmam - அகத்தியர்



வர்மக்கலை (Varmam)
வர்மக்கலை (Varmam) என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல்லது புள்ளிகளை பற்றிய அறிவை மையமாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும்.வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக்கலையாக வளர்த்தெடுக்கப்பட்டது. 
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்


வர்மங்களின் வகைகள்

படுவர்மம்
நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்
இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்
ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்
பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் அகத்தியர்.


உடலில் உள்ள சில முக்கிய வர்மப் புள்ளிகள்...

தலைப்பகுதியில் உள்ள வர்மங்கள்...37
திலர்த வர்மம்
கண்ணாடி கால வர்மம்
மூர்த்தி கால வர்மம்
அந்தம் வர்மம்
தும்மிக் கால வர்மம்
பின் சுவாதி வர்மம்
கும்பிடு கால வர்மம்
நட்சத்திர வர்மம்
பால வர்மம்
மேல் கரடி வர்மம்
முன் சுவாதி வர்மம்
நெம வர்மம்
மந்திர கால வர்மம்
பின் வட்டிக் கால வர்மம்
காம்பூதி கால வர்மம்
உள்நாக்கு கால வர்மம்
ஓட்டு வர்மம்
சென்னி வர்மம்
பொய்கைக் கால வர்மம்
அலவாடி வர்மம்
மூக்கடைக்கி கால வர்மம்
கும்பேரிக் கால வர்மம்
நாசிக் கால வர்மம்
வெட்டு வர்மம்
அண்ணாங்கு கால வர்மம்
உறக்க கால வர்மம்
கொக்கி வர்மம்
சங்குதிரி கால வர்மம்
செவிக்குத்தி கால வர்மம்
கொம்பு வர்மம்
சுமைக்கால வர்மம்
தலைப்பாகை வர்மம்
பூட்டெல்லு வர்மம்
மூர்த்தி அடக்க வர்மம்
பிடரி கால வர்மம்
பொச்சை வர்மம்
சரிதி வர்மம்

நெஞ்சுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...13
தள்ளல் நடுக்குழி வர்மம்
திவளைக் கால வர்மம்
கைபுஜ மூன்றாவது வரி வர்மம்
சுழி ஆடி வர்மம்
அடப்பக்கால வர்மம்
முண்டெல்லு வர்மம்
பெரிய அஸ்தி சுருக்கி வர்மம்
சிறிய அஸ்தி சுருக்கி வர்மம்
ஆனந்த வாசு கால வர்மம்
கதிர் வர்மம்
கதிர் காம வர்மம்
கூம்பு வர்மம்
ஹனுமார் வர்மம்

உடலின் முன் பகுதியில் உள்ள வர்மங்கள்..15
உதிர்க் கால வர்மம்
பள்ளை வர்மம்
மூத்திர கால வர்மம்
குத்து வர்மம்
நேர் வர்மம்
உறுமி கால வர்மம்
ஆமென்ற வர்மம்
தண்டு வர்மம்
லிங்க வர்மம்
ஆண்ட கால வர்மம்
தாலிக வர்மம்
கல்லடைக் கால வர்மம்
காக்கடை கால வர்மம்
புஜ வர்மம்
விதனு மான் வர்மம்

முதுக்குப் பகுதியில் உள்ள வர்மங்கள்...10
மேல் சுருக்கி வர்மம்
கைக்குழி காந்தாரி வர்மம்
மேல்க்கைப் பூட்டு வர்மம்
கைச் சிப்பு எலும்பு வர்மம்
பூணூல் கால வர்மம்
வெல்லுறுமி தல்லறுமி வர்மம்
கச்சை வர்மம்
கூச்ச பிரம்ம வர்மம்
சங்கு திரி கால வர்மம்
வலம்புரி இடம்புரி வர்மம்

கைகளில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...9
வலம்புரி இடம்புரி வர்மம்
தல்லை அடக்க வர்மம்
துதிக்கை வர்மம்
தட்சணக் கால வர்மம்
சுழுக்கு வர்மம்
மூட்டு வர்மம்
மொளியின் வர்மம்
கைக்குசத்திட வர்மம்
உள்ளங்கை வெள்ளை வர்மம்

கைகளில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...8
தொங்கு சதை வர்மம்
மணி பந்த வர்மம்
திண்டோதரி வர்மம்
நடுக்கவளி வர்மம்
சுண்டு விரல் கவளி வர்மம்
மேல் மணிக்கட்டு வர்மம்
விஷ மணி பந்த வர்மம்
கவளி வர்மம்

கால்களில் முன் பக்கம் உள்ள வர்மங்கள்...19
முதிர கால வர்மம்
பத்தக்களை வர்மம்
ஆமைக்கால வர்மம்
பக்க வர்மம்
குழச்சி முடிச்சி வர்மம்
சிறுவிரல் கவளி வர்மம்
சிரட்டை வர்மம்
கால் மூட்டு வர்மம்
காலக் கண்ணு வர்மம்
நாய்த் தலை வர்மம்
குதிரை முக வர்மம்
கும்பேறி வர்மம்
கண்ணு வர்மம்
கோணச்சன்னி வர்மம்
கால வர்மம்
தட வர்மம்
கண் புகழ் வர்மம்
அனகால வர்மம்
பூமிக் கால வர்மம்

கால்களில் பின் பக்கம் உள்ள வர்மங்கள்...13
இடுப்பு வர்மம்
கிழிமேக வர்மம்
இழிப் பிழை வர்மம்
அணி வர்மம்
கோச்சு வர்மம்
முடக்கு வர்மம்
குளிர்ச்சை வர்மம்
குசத்திட வர்மம்
உப்புக் குத்தி வர்மம்
பாதச் சக்கர வர்மம்
கீழ் சுழி வர்மம்
பதக்கல வர்மம்
முண்டக வர்மம்

பின் முதுகுப் பகுதியில் உள்ள வர்மங்கள்...8
மேல் சுருக்கு வர்மம்
மேலாக கால வர்மம்
கீழாக கால வர்மம்
தட்டேல்லு வர்மம்
மேலஅண்ட வர்மம்
நாயிருப்பு வர்மம்
கீழ் அண்ட வர்மம்
குத்திக் கால வர்மம்

இவையே உடலின் முக்கிய வர்மப் புள்ளிகள் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்..

எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!
தவிர்க்க இயலாத சூழலில் தன்னை காத்துக் கொள்ளும் பொருட்டு எதிரியை செயலிழக்க வைக்கும் சில வர்ம முறைகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முறையாக கற்றவர்களால் மட்டுமே இவற்றைப் பயன் படுத்த முடியும், எனவே யாரும் இவற்றை முயற்சிக்கவோ, பரிட்சிக்கவோ வேண்டாம். நமது முன்னோர்களின் அருமை, பெருமைகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியாக, தகவலாக மட்டுமே எடுத்துக் கொண்டிட வேண்டுகிறேன்.

தட வர்மம்
"மைந்தா அங்குலம் நாலின்கீழே
செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
தடவர்மம் தட்டென உயர்ந்து 
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
உய்யவே உளைச்சலது காணும்"
-
அகத்தியர் -

நமது கால் பெருவிரலுக்கும் அதற்க்கு அடுத்த விரலுக்கும் நடுவில் இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி இருக்கிறது. இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி, இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க எதிரியால்  முடியாது போய்விடும்.

முடக்கு வர்மம்
"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"
- அகத்தியர்
இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில், அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில் அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன்,  அந்த இடத்தில் அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால் அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க முடியாத நிலை ஏற்படும். 
அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால் நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்.

சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்




சித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்


சித்தர்களின் ஆசி கிடைக்க..... 90 நாட்கள்
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை, ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி, தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய் (பாக்கெட் நெய் வேண்டாம்). ஒரு காசி சொம்பு, சுத்தமான நீர். (வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்). தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும். இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும். இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர். நந்தீசர், திருமூலர், கொங்கணர், கோரக்கர், புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர். உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம். ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.

ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும். அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும். அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும். படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும். இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும். உணவில் உப்பு, காரம், புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர். இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி, மதம், மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!

குறிப்பு: இந்த முயற்சி, சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம். தம்பட்டம் அடிக்கக் கூடாது. உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும், வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

Friday, January 10, 2014

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள்.

சித்தர்களின் அடிப்படையில் 

64 ஆயகலைகள்,
48 அருட்கலைகள்,
9 கடவுட்கலைகள்,
9 தெய்வீகக் கலைகள்,
9 நோய்க் கலைகள்,
9 பேய்க்கலைகள்,

9 தேய் கலைகள் என்று எண்ணற்ற கலைகளும், பலவகைப்பட்ட சாத்திறங்களும், தோத்திறங்களும், மந்திறங்களும், வழிபாட்டு முறைகளும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.
இவற்றின் செயலகங்களாக ஆதியில்
108 திருப்பதிகள்,
243 சத்தி பீடங்கள்,
1008 சிவாலயங்கள் படைக்கப் பட்டன. கால வேகத்தாலும், கருத்து வளர்ச்சியாலும், தேவையாலும் 48 வகைப்பட்ட வழிபாட்டு நிலையங்கள் தோற்றுவிக்கப் பட்டன. இவை காலந்தோறும் தோன்றிய அருளாளர்களால் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளாக வளர்ந்து விட்டன. அருளாளர்களும் காலங்கள் தோறும் தங்கள் தங்களுடைய பத்தி நிலைகள், சத்தி நிலைகள், சித்தி நிலைகள், முத்தி நிலைகள் முதலியவைகளுக்கேற்பத் தங்களுடைய அநுபவங்களைப் பத்தி இலக்கியங்களாகப் படைத்திருக்கிறார்கள். ஆயகலைகள் அறுபத்தி நான்கு -சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

                    சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது. 

முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிகிதம்); 
3. கணிதம்;                                                    4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);                               6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);                          8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);                     10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);            12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);            14.மருத்துவ நூல்( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;                                                      18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);            20. நாடகம்;
21. நடம்;                                                            22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);                                             24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);                            26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);              28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);                 30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);    32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை); 34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);                         36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);                       38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);                   40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);                               42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);         46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);                                 48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);           50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்); 

51. வான்செலவு (ஆகாய கமனம்);          52.கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);    54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);                   58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);          60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);     62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);               64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

வேறொரு பட்டியல் 

1. பாட்டு (கீதம்);                                   2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);                             4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;                     8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;

9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை; 10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்); 12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);  14. மாலைதொடுக்கை;

15. மாலை முதலியன் அணிகை;16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;18. விரை கூட்டுகை;

19. அணிகலன் புனைகை;20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);

23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி); 24. தையல்வேலை; 
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை; 

29. நெருட்டுச் சொற்றொடரமக்கை; 30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி; 32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை; 36. மனைநூல் (வாஸ்து வித்தை);

37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை); 38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;40. தோட்ட வேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி); 

47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை; 48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை; 
49. பொறியமைக்கை;50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை; 

53. வனப்பு (காவியம்) இயற்றுகை; 54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;            56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை); 58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;    60. சொக்கட்டான்; 
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி; 64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. 

சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.